<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6667958\x26blogName\x3dJust+Shoot+Me\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttp://sodabottle.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://sodabottle.blogspot.com/\x26vt\x3d-3915831345667505297', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Just Shoot Me

Bala, 28, Gordon Gekko in the making, pseudo-intellectual, cynic, bibliophile, obsessive compulsive ranter...

சுபமுகூர்த்த தினமும் சாவுகிராக்கிகளும்

May 29, 2007

வைகாசி பொறந்தாச்சு, நாட்ல இருக்க எரும மாட்டுக்கெல்லாம் கல்யாணம் பண்ணும் நேரம் ஆரம்பிச்சாச்சு. பரதேசிங்க கல்யாணத்த எங்கணயாச்சு காட்டுக்குள்ள வச்சுக்கனும் இல்லன்னா அர்த்த ராத்திரீல வச்சுக்கணும். நல்லா பீக் அவர்ல பஸ்சுல கூட்டம் பிதுங்கற நேரத்துல வச்சு தொலச்சுறானுங்க. அதுவும் ஊர்ல இருக்க சோத்துக்கு செத்தவுனக்கெல்லாம் பத்திரிக்கை வேர கொடுத்த்ற்றானுங்க. வேல வெட்டியில்லாதுகளும் வெள்ள வேட்டி வெள்ள சட்டையோட (பொட்டச்சிகளா இருந்தா ராமராஜன் ஃபேஷன் சென்ஸ்க்கு பட்டு புடவ, கிலோ கணக்குல நகை, டன் கணக்குல பவுடர்) காலையில கரெக்டா கொட்டிகிட கிளம்பிருதுக. தினம் பஸ்ல ஆஃபிஸ், ஸ்கூல் போறவன் பாடு தான் திண்டாட்டம். கூட்டத்துல நிக்கவே இடமில்லாம் நாங்க அடஞ்சுகிட்டிருக்கோம், இதுல வேட்டிய மிதிக்காத, சட்ட கசங்குது சாயாதன்னு நாட்டாம வேற. ஏன்டா டேய் நீங்கெல்லாம் போய் மூஞ்சியக் காட்டலேன்னா கல்யாணம் நடக்காதா?. போய் என்ன இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சினைக்கு மீடியேட்டா பண்ணப்போறீங்க?. ஒரு ஓரமா நின்னுட்டு, கொட்டிகிட்டு வரப்போறீங்க, அதுக்கு எதுக்குடா காலங்ககாத்தால ரெகுலர் கம்மூயட்டர் உயிர வாங்குறீங்க?. பத்தாக்குரைக்கு எல்லா தொரயும் நூறு ரூவா நோட்ட நீட்டி மூனம்பது டிக்கட் கேக்க வேண்டியது. கண்டக்டர கடுப்பேத்தி வாக்குவாதம் பண்ண வேண்டியது. நிறுத்த கூடாத கல்யாண மண்டபத்துல் நிறுத்தச் சொல்லி தகராறு வேற. அய்யோ அய்யோ. அப்புறம் இது என்னங்க வேட்டி, புடவை? இதுகள மாறி உடுத்தறவனுக்கு உபத்திரவம் கொடுக்குற உடுப்பு வேற எதாச்சு இருக்கா?. உடைன்னா இடுப்புல நிக்கனும், குநிஞ்சு நிமிந்தா கழன்டு போகக் கூடாது. இதச் சொல்டா ஒடனே கலாச்சார காவலர் எரும கூட்டம் வந்து "டமில் கலாச்சாரம்" பத்தி பேச ஆரம்பிச்சுடும். பரதெசிங்க வூட்ல உக்காந்து பெர்முடாஸ் போட்டுகிட்டு கூசாம் டைப் அடிப்பானுங்க வேட்டி டமில் கலாச்சார உடைன்னு.

அய்யோ அடுத்த வாரம் ஸ்கூல் வேற ஆரம்பிச்சுரும்.. கூட்டம் எகிறும், கல்யாண வீட்டு சாவுகிராக்கிங்க தொந்தரவு தாங்க முடியாதே!!. யாராச்சு கொசு மருந்தடிச்சு கொல்லுங்கப்பா...

Labels:

posted by Bala, 9:19 PM

0 Comments:

Add a comment