<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6667958\x26blogName\x3dJust+Shoot+Me\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttp://sodabottle.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://sodabottle.blogspot.com/\x26vt\x3d-3915831345667505297', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Just Shoot Me

Bala, 28, Gordon Gekko in the making, pseudo-intellectual, cynic, bibliophile, obsessive compulsive ranter...

அரசியல்நாகரிகம் என்னும் oxymoron

December 23, 2006

கிரிஸ்த்மஸ் லீவுக்கு வூட்டுக்கு போன சோடாபாட்டிலின் பிஞ்ச செருப்பைப் பார்த்த அம்மா தலையிலடித்துக் கொண்டு ("என் மானத்த வாங்கிறீயேடா!") புது செருப்பு வாங்க ஆயிரம் ரூபாய் கொடுத்தார் ("BATA செருப்பா வாங்கு"). ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு காந்திபுரம் போன சோடாபாட்டிலுக்கு செருப்புக்குப்போய் ஆயிரம் ரூபாய் ஓவர்ன்னு பட்டுது. நூத்தம்பதுக்கு லோக்கல் ப்ராண்ட் செருப்பை வாங்கி விட்டு மிச்ச ரூவாய்க்கு செலவு வைக்க வழக்கம் போல் ராஜராஜேஸ்வரி டவர்ஸின் நிரந்தர புத்தக கண்காட்சி/கடைக்குள் நுழைந்தான்.
யூடா, ஒரேகான் போன்ற காட்டுப் பிரதேசங்களின் நூலகங்களின் மிஞ்சியதும் எஞ்சியதும் குவிந்து கிடந்தன.அந்த குப்பைகளுக்குள் ஆர்ஸ்ன் ஸ்காட் கார்டை பார்த்து எரிச்சல் வந்த்து. பழசு வேணாம் என்று மட்டிப் பேப்பரில் அச்சடித்து பெஸ்ட் செல்லர்களை கடையனுக்கும் கொண்டு செல்லும் பகுதிக்குப் போனான். அங்கு கிரிஸ்டோஃபர் பாவோலினியின் எல்டஸ்ட் (Eldest) நூறு ரூபாய்க்கு இருந்ததைக பார்த்தபின் பாட்டிலின் எரிச்சல் இன்னும் அதிகமானது. வந்ததுக்கு எதையாவது வாங்கணும் என்று டமில் புக்ஸ் செக்ஷனில் புரவ்ஸ் செய்யப் போனான். போன எடத்தில் தான் "அந்த" புத்தகத்தைப் பார்த்தான். அந்த புத்தகத்தில் என்ன இருந்தது என்பது தான் இந்தப் பதிவு..

தற்கால அரசியல் தலைவர்கள் நாகரிகம் இன்றி கன்னா பின்னா வென ஒருவரை யொருவர் வசை பாடுகிறார்கள் என்று பல பெருசுகள் புலம்பி கேட்டதுண்டு - "அவரைப்பார்த்தால் கும்பிடத்தோன்றும் உன்னைப் பார்த்தால் கூப்பிடத்தோன்றும்" போன்ற சிறந்த சொற்பொழிவுகளை ஆற்றியவர் பண்பாளர் என போஸ்டர் அடிச்சு ஒட்டுறாங்க (அட ரெண்டு சைட்லேர்ந்தும் தாங்க) என கம்ப்ளேண்டு. முன்னெல்லாம் அப்டி கிடையாதுன்னு பெருமூச்சு வேற வரும். நான் படித்த அந்த புத்தகம் 1952 மற்றும் 1957 பொதுத் தேர்தல்களில்
ஒரு தலைவர் பேசிய ஏழு பேச்சுகளின் தொகுப்பு - அவருடைய ஜாதிக் கட்சி அச்சடிச்சு வெளியிட்டிருக்கிறது. 1950 களில் தமிழ் அரசியலில் பெருந்தலைகளாக இருந்த "ஆனியன் நாயக்கர்", "கிங்ஜி", "பிக்பிரதர்", "கிங்மேக்கர்" "ஆர்டிஸ்ட்" பற்றி "க்ரீன்கோல்டு" (அதாங்க அக்டோபர் கடைசியானா மதுரை மாநகர மக்களின் வசவுக்கு ஆளாகிறாரே அவர் தான்) பேசிய பேச்சுகளே அவை. சும்மா சொல்லக் கூடாது எல்லாத்தையும் பொளந்து கட்டுகிறார். தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் ரேஞ்சுக்கு இல்லைனாலும் நல்லாவே வைகிறார்.

ஆனியன் நாயக்கரை ஏகவசனத்தில் கன்னா பின்னாவென வெளுத்து வாங்குகிறார். ரோமாபுரி ராணி எழுதி தமிழ் ஸ்கூல் பாய்சை கெடுத்தாராம், தங்கையின் காதல் எழுதி இன்செஸ்டை பரப்பினாராம். ஆர்டிஸ்ட் டால்மியாபுரத்தை கள்ளக்குடின்னு பேர் மாத்துன்னு சொன்னதுக்கு ஏன் போய் ஹார்வே பட்டிய பெர்மாத்தச் சொல்லேன், சொன்னா கட்சிக்கு காசு கிடைக்காதுன்னு பயம்கிறார்.திலகர் திடல்ன்னு சோல்லக்கூசுது ஆனா ஜின்னா திடல் சோல்லக் கூசலியோன்னு கேக்குறார். லிபர்டேரியன் ஹீரோவான கிங்ஜிக்கும் வசவு விழுகிறது - கீழ் சபையில் ஜெயிக்க துப்பில்லாமல், கவர்னர் நாமினேஷனில் மேல் சபை மூலம் ஜெயிச்சு வந்துட்டார்ன்னு.

எல்லாத்தையும் விட கிங்மேக்கர் பாடுதான் பெரும் திண்டாட்டம். கிங்மேக்கரை கள்ளவோட்டு போட்டவர் என்கிறார், கள்ளநோட்டும் அடிச்சார் என்கிறார். இங்கிலீஸ் பேசத்தெரியாதவனெல்லாம் (ஏக வசனத்தில் தான்) எதுக்கு சிஎம் என்கிறார். 1936 இல் சொந்த ஜாதிக் காரங்க வேட்டிய உருவினப்ப அழுதுகிட்டு தெருவில் நின்னவர் தான் என்கிறார். தைரியமிருந்தா கேஸ் போடு, நான் கோர்ட்ல வந்து நிரூபிக்கிறேன் (கள்ளநோட்டைப் பத்தி) என்கிறார். ஒரு வசை மழை பொழிகிறது.

இப்ப்டி பல மேட்டர படிச்சுகிட்டே போன சோடாபாட்டிலுக்கு சிரிப்பு தாங்க முடியாமல் வாய் விட்டு சிரிச்சுட்டான். பக்கத்துல இருந்தவங்க எல்லாம் ஒருமாதிரியா பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. கடைசியில எல்லாத்துக்கும் மேல ஒரு குண்டு தூக்கி போட்டார் - ஹிட்லர் தான் அணுகுண்ட முதல்ல செஞ்சான், அதை அமெரிக்கா மேல் போட அனுப்பின் விமான் காப்டன் தான் அதைக் கொண்டுபோய் ஐசன்ஹோவர் கிட்ட கொடுத்துட்டான்னு. (கவனிக்க வேண்டியது : கிரீன்கோல்டின் கொள்கை குருவான போஸ்க்கு நேஷனல் சோஷ்யலிசத்தின் மேல் ஒரு காதல், அது சிஸ்யருக்கும் இருந்திருக்கலாம்). இதுக்கு மேல படிச்சா நட்டு கழண்டுபோய்டும்னு பாட்டில் இடத்தை காலி பண்ணி வூட்டப் பாத்து கிளம்பிட்டான்.
posted by Bala, 1:03 PM

0 Comments:

Add a comment